உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தரமான செட்டாப் பாக்ஸ் வழங்க கேபிள் ஆப்பரேட்டர்கள் மனு

தரமான செட்டாப் பாக்ஸ் வழங்க கேபிள் ஆப்பரேட்டர்கள் மனு

கரூர்:தரமான செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என, கரூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களாக, கரூர் மாவட்டத்தில், 30 ஆண்டுகளாக செயல்படுகிறோம். இந்நிலையில், இணைப்பு வழங்க வைக்கப்படும், சி.ஏ.எஸ்.,க்கு செட்டாப் பாக்ஸ்கள் தரம் இல்லாமல் உள்ளது. அடிக்கடி பழுதாகிறது. இதனால் சந்தாதாரர்களுக்கு, கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லை. சந்தா கட்டணம் வசூல் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தரமான செட்டாப் பாக்ஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை