உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்பு

டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்பு

கரூர்:தாட்கோ மூலம், டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக, பல்வேறு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை தனியார் நிறுவனத்தில் இணைந்து டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு, மூன்று லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். இதற்கு, https://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ