உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கரூர் :அரசு முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அரசு முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மூன்று மாத சான்றிதழ் படிப்பில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இச்சான்றிதழ் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் வரும், 31 மாலை, 5:00 மணிக்குள் உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் பயிற்சி கட்டணம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை