உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விளையாட்டு விடுதியில் சேர மே 5க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

விளையாட்டு விடுதியில் சேர மே 5க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்:விளையாட்டு விடுதியில் சேர வரும், மே 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, -9- மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர், www.sdat.tn.gov.inஎன்ற இணைய தளத்தில், மே 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி வரும் மே., 7ல் ஆண்களுக்கும், மே., 8 ல் பெண்களுக்கும் நடக்கிறது. இதற்கான தகவல்கள் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும். பள்ளி மாணவ, மாணவியருக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டி, மாவட்ட அளவிலான தேர்வுகள் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு, 9514000777, 7401703493என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை