உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக, வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடங்கியது.துவக்க நிகழ்ச்சி புணவாசிப்பட்டி கிராமத்தில், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் தலைமையில் தொடங்கியது. கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்செல்வி, மானிய திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண் மைய தொழில்நுட்ப வல்லுனர் (உழவியல்) திருமுருகன், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் குறித்து விளக்கம் அளித்தார். இதேபோல், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி (அறுவடை பின்சார் தொழில்நுட்பம்) சிவா, தோட்டக்கலை பயிர்களில் அறுவடைக்கு பின்பு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.இந்நிகழ்ச்சியில், 104 விவசாயிகள், கிராமப்புற பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ