சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்கப்-படுமா?
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பவுத்திரத்தில், பொதுமக்கள் பயன் பாட்-டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், சிறுவர், சிறுமிகள் விளையாட வசதி-யாக, விளையாட்டு உப கரணங்கள், உடற்பயிற்சி செய்யவும் தனியாக சாதனங்களும் இருந்தன.பூங்காவில் தற்போது விளையாட்டு உபகர-ணங்கள், விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடிய-வில்லை. கிராமப்பகுதியான பவுத்திரத்தில் வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாதால், பூங்-காவில் பழுதான நிலையில் உள்ள, உப கரணங்-களை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.