மேலும் செய்திகள்
பயணியர் அவதி
27-Jun-2025
கரூர், க.பரமத்தி ஒன்றியம், அணைப்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட முடிகணம் கிராமம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து, பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பணி நிமித்தமாக தினந்தோறும் கரூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி, பஸ்சுக்காக பொதுமக்கள் நிற்க வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு சிரமத்திற்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே, முடிகணம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
27-Jun-2025