உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் மீது சரக்கு வாகனம் மோதல்: 3 பேர் படுகாயம்

கார் மீது சரக்கு வாகனம் மோதல்: 3 பேர் படுகாயம்

கார் மீது சரக்கு வாகனம்மோதல்: 3 பேர் படுகாயம்அரவக்குறிச்சி, டிச. 29-கர்நாடகா மாநிலம், பெங்களூரு நாராயணபுரம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் தனுஜா ராஜா, 38. இவரது மகன் தக்ஷித், 7, இவரது தாயார் சூரியகுமாரி, 57; இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் மாலை காரில், சேலம் - மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த டோல்கேட் அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை அருகே உள்ள சின்னவடகம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 35, என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், தனுஜா ராஜா ஓட்டிச்சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், காரில் பயணித்த மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மூவரையும் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !