உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

கரூர்: .க.பரமத்தி அருகே, டிப்பர் லாரியில் ஆற்று மணலை கடத்தியதாக உரிமையாளர், டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி அலுவலர் சங்கர், 41, உள்ளிட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் கோவை சாலை க.பர-மத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டிப்பர் லாரியில் ஆறு யூனிட் ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து, கனிம வளத்துறை உதவி அலுவலர் சங்கர், போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, டிப்பர் லாரி உரிமையாளர் சின்ராசு, 45; டிரைவர் விஸ்வநாதன், 41; ஆகியோர் மீது, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை