குடிநீருக்காக மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு
கரூர், வெள்ளியணை அருகே, குடிநீர் வரவில்லை என கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன், ஜெகதாபி பஞ்சாயத்து பொரணி தெற்கு பகுதியில், குடிநீர் சரிவர வரவில்லை என கூறி, நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து போலீஸ் எஸ்.ஐ., ரூபினி, அனுமதி இல்லாமல் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வெள்ளியணை போலீசார் செல்வம், 37, சண்முகம், 45, மதுரை வீரன், 25, சக்திவேல், 24, சதீஷ், 21 உள்பட, பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.