உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில் திருவிழாவில் தகராறு இரு பிரிவினர் மீது வழக்கு

கோவில் திருவிழாவில் தகராறு இரு பிரிவினர் மீது வழக்கு

குளித்தலை, குளித்தலை அடுத்த, ராஜேந்திரன் பஞ்., கருங்காளாப்பள்ளி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த, 8ம் தேதி காலை, 11:00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த வனிதா, 43, என்பவர் கோவில் சுற்றுப்பகுதியில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த மணிமாறன், சுரேந்தர், தினேஷ், சதீஷ், ஆகாஷ் ஆகியோர் மது போதையில் கோலத்தை அழித்தும், தகாத வார்த்தை பேசியும் தகராறில் ஈடுபட்டனர். மறுநாள் காலை வனிதா வீட்டிற்கு சென்ற ஐந்து பேரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த வனிதா கணவர் சங்கர் தடுத்து கேட்ட போது, சவுக்கு கட்டையாலும், கையாளும் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து வனிதா கொடுத்த புகார்படி, மணிமாறன், சுரேந்தர், தினேஷ், சதீஷ், ஆகாஷ் ஆகிய ஐந்து பேர் மீதும், மணிமாறன், 29, கொடுத்த புகார்படி சங்கர், அவரது மனைவி வனிதா, சுபாஷ், ரவி ஆகிய நான்கு பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை