சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு
குளித்தலை, சாலை மறியலில் ஈடுபட்ட, 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., அ.உடையாபட்டி பஸ் நிறுத்தத்தில், நேற்று முன்தினம் காலை அரசு அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள், பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாகாளிப்பட்டி ஆறுமுகம், 45, குழந்தைவேல், 55, முத்துசாமி, 62, ராமர், 55, உள்பட, 20 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.