மேலும் செய்திகள்
கேரளா பர்னிச்சர் கண்காட்சி துவக்கம்
25-Dec-2024
டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கியசேல்ஸ்மேன் மீது வழக்குப்பதிவுகரூர், டிச. 29-கரூர் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கியதாக, சேல்ஸ்மேன் உள்பட, மூன்று பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு பாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜ் கண்ணா, 51; இவர், பாலம்மாள்புரத்தில், டாஸ்மாக் மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.அதே டாஸ்மாக் மதுபான கடையில் சேல்மேனாக பணியாற்றி வந்த மாணிக்க சுந்தரம்,45; என்பவரை கடந்த, 16 ல் பணியில் ஒழுங்கின்மை காரணமாக, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சஸ்பென்ட் செய்துள்ளார்.இதனால், ஆத்திரம் அடைந்த சேல்ஸ்மேன் மாணிக்க சுந்தரம் உள்ளிட்ட மூன்று பேர், கடந்த, 24 ல் டாஸ்மாக் மதுபான கடை முன் நின்று கொண்டிருந்த, சூப்பர்வைசர் ராஜ் கண்ணாவை தாக்கியுள்ளார்.இதுகுறித்து, ராஜ் கண்ணா கொடுத்த புகாரின் படி வெங்கமேடு போலீசார், மாணிக்க சுந்தரம் உள்பட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
25-Dec-2024