மேலும் செய்திகள்
மடைமாற்றும் தி.மு.க.,!
28-Nov-2025
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
16-Dec-2025
கரூர்: '' மத்திய பா.ஜ., அரசு, 100 நாள் வேலை திட்ட பெயரை மாற்-றுவதை ஏற்க முடியாது,'' என, அகில இந்திய விவசாய தொழி-லாளர் சங்க மாநில தலைவரும், கந்தர்வகோட்டை மா.கம்யூ., கட்சி எம்.எல்.ஏ.,வுமான சின்னதுரை, கரூரில் நிருபர்களிடம் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:தேச தந்தை மகாத்மா காந்தி பெயரில் உள்ள, 100 நாள் வேலை திட்டத்தை, சிதைக்கும் வகையில் மத்திய அரசு மசோ-தாவை எதிர்ப்புக்கு இடையில், லோக்சபாவில் தாக்கல் செய்கி-றது. ஏழை மக்களின் பொருளாதாரத்தை, 100 நாள் வேலை திட்டம் பூர்த்தி செய்கிறது. காந்தி பெயரில் உள்ள அந்த, திட்-டத்தின் பெயரை மாற்றுவதை ஏற்க முடியாது. மேலும் தேவைக்-கேற்ப வேலை, நிதி ஒதுக்கீடு என மத்திய அரசு கூறுகிறது. இதை, நாட்டில் உள்ள ஏழை மக்கள் ஏற்க மாட்டார்கள். இதனால் வரும், 18ல் மத்திய அரசின், 100 நாள் வேலை திட்ட மசோதாவின் நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும்.அரசே கூட்டுறவு சங்கங்கள் மூலம், வட்டி இல்லாமல், மூன்று லட்சம் ரூபாய் வரை ஏழை குடும்பத்தினருக்கு கடன் வழங்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால், தமிழகம் முழுவதும் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணமாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன், 5,000 ரூபாய் மற்றும் காய்கறிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.முன்னாள் எம்.எல்.ஏ., லாசர் உடனிருந்தார்.
28-Nov-2025
16-Dec-2025