உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செல்லாண்டிபாளையம் வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை

செல்லாண்டிபாளையம் வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை

கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, ராயனுார் செல்லாண்டிபாளையம் இடையே பாசன வாய்க்கால் செல்கிறது. இதில் தேவையற்ற கழிவுகள் கலப்பதால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தண்ணீர் தேக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. கடும் துர்நாற்றமும் வீசுவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாய்க்காலை பார்வையிட்டு சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை