மேலும் செய்திகள்
சர்வதேச குழந்தைகள் உரிமை தினம்
21-Nov-2024
கரூர், டிச. 21-புகழூர் நகராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டம் நடந்தது.புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகளை, பள்ளியில் சேர்த்து மறுவாழ்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளி கட்டடங்கள் உறுதி தன்மை குறித்து அவ்வப்போது அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளுதல், குழந்தை களுக்கான அவசர இலவச எண், 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், 18 வயதுக்கு கீழ் பெண் குழந்தைகள் எவரேனும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டால், மருத்துவ அலுவலர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை காத்தல் மற்றும் உறுதி செய்தல். குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தலை தடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்துதல், பாலியல் ரீதியான வன்முறைகளில் இருந்து குழந்தைகள் தங்களை காத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் மலர்கொடி, புகழூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Nov-2024