வாய்க்காலில் விழுந்து குழந்தை பரிதாப பலி
கிருஷ்ணராயபுரம்: கட்டளை மேட்டு வாய்க்காலில், தவறி விழுந்த குழந்தை உயிரி-ழந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து மாயனுார் தண்ணீர் பாலம் அருகில் கணபதி, சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயது கிஷாந்த் என்ற குழந்தை உள்ளது. நேற்று காலை, 8:30 மணிக்கு குழந்-தைக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் கரை அருகில் சாதம் ஊட்டி விட்டு வீட்டுக்கு தாய் சென்றுள்ளார். திரும்பி வருவ-தற்குள், தனியாக இருந்த குழந்தை கிஷாந்த் அருகில் உள்ள கட்-டளை மேட்டு வாய்க்காலில் தவறி விழுந்துள்ளது. அவரது தாய் தேடி பார்த்த பிறகு இல்லாததால், நீர்வளத்துறை அதிகாரிகள், மாயனுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உள்ளூர் மீனவர்கள் தேடிய நிலையில், வாய்க்காலில் ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பின் குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.