உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.,வினர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.,வினர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.,வினர் கைதுகரூர், அக். 2-தனியார் மொபைல் போன் நிறுவனத்தை கண்டித்து, கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட, சி.ஐ.டி.யு., அமைப்பை சேர்ந்த, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சாங் மொபைல் போன் நிறுவனத்தில், தொழிலாளர்களின், தொழிற்சங்க உரிமையை வலியுறுத்தி, கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில், மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை முன், நேற்று காலை சாலை மறியல் நடந்தது. மாநில சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் சிங்காரவேலு, மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி, நிர்வாகிகள் ராஜா முகமது, கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட, நான்கு பெண்கள் உள்பட, 30 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை