மேலும் செய்திகள்
போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
15-Aug-2025
கரூர்;கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வு நடந்து வருகிறது. இதில், டி.என்.பி.எஸ்.பி., குரூப்-2 தேர்வுக்கு பயிற்சி நடக்கிறது. சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம் வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் காற்றோட்டமான அறை, குடிநீர் வசதி, ஸ்மார்ட் போர்டு, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், மென்பாட குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதி என அனைத்து வசதிகளுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. வார தேர்வுகள், மண்டல அளவில் மாதிரி தேர்வுகள், முழுமாதிரி தேர்வுகள் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 04324--223555, 6383050010 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
15-Aug-2025