உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.40.43 லட்சம் மதிப்புள்ள தேங்காய், கொப்பரை ஏலம்

ரூ.40.43 லட்சம் மதிப்புள்ள தேங்காய், கொப்பரை ஏலம்

கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 40 லட்சத்து, 43 ஆயிரத்து, 538 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.நொய்யல் அருகே, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. 22,560 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 57.25 ரூபாய், அதிகபட்சமாக, 72.99 ரூபாய், சராசரியாக, 68.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,278 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 4 லட்சத்து, 90 ஆயிரத்து, 802 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 210.99 ரூபாய், அதிகபட்சமாக, 231.89 ரூபாய், சராசரியாக, 226 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 163.25 ரூபாய், அதிகபட்சமாக, 226,86 ரூபாய், சராசரியாக, 204.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 15,933 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 34 லட்சத்து, 68 ஆயிரத்து, 248 ரூபாய்க்கு விற்பனையானது.எள், 12 மூட்டைகள் வரத்தானது. மஞ்சள் வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 93.99 ரூபாய், அதிகபட்சமாக, 105.19 ரூபாய், சராசரியாக, 95.88 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 883 கிலோ எடையுள்ள எள், 84 ஆயிரத்து, 488 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 40 லட்சத்து, 43 ஆயிரத்து, 538 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை