உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புத்துாரில் இந்திய கம்யூ., கட்சி ஒன்றிய மாநாடு

புத்துாரில் இந்திய கம்யூ., கட்சி ஒன்றிய மாநாடு

குளித்தலை, குளித்தலை அடுத்த புத்துாரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய மாநாடு, நிர்வாகிகள் மோகனா, கோகிலா ஆகியோர் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலர் மாரியப்பன், துணை செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலர் மோகன்குமார், ஆலோசனை வழங்கி பேசினார். இக்கூட்டத்தில், புத்துார் கிராம சீரமைப்பு நிறுவனம் மூலம், கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள, 56 வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. அரசுக்கு அனைத்து வரிகளும் செலுத்தும் மக்களுக்கு, தொண்டு நிறுவனத்திடம் இருந்து விலக்கு அளித்து, தமிழ்நாடு அரசு சார்பாக, 56 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள் நல்லுசாமி, குழந்தைவேல் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது, தலைமைக்குழு தேர்வு செய்தல், கொடி ஏற்றுதல், நிதிநிலை வரவு செலவு, நிர்வாகிகள் தேர்வு செய்வது என்பன போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை