உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கவுண்டம்பாளையம் பள்ளியில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

கவுண்டம்பாளையம் பள்ளியில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

கரூர், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், இந்திய அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் தலைமை வகித்தார்.இந்திய அரசியலமைப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தெரசா ராணி, ஜெயபாரதி, சுமதி, நந்தினிபிரியா, பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். * புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். அலுவலர்கள், தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.நிகழ்ச்சியில், முதுநிலை மேலாளர் (சட்டம்) சுரேஷ், உதவி பொது மேலாளர் சபாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ