கட்டுமான தொழிலாளர் சங்கம் இலவச பட்டா வழங்க தீர்மானம்
கரூர்: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்த அனைவருக் கும் பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்டுமான சங்க தொழிலாளர் போராட்ட ஆயத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கரூரில் உள்ள, மா.கம்யூ.,- சி.ஐ.டி.யு., சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித் தார். மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்தும், அனைவருக்கும் பட்டா வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை கண்டித்தும், உடனடியாக பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளார்கள் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.