உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க ஆலோசனை கூட்டம்

வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க ஆலோசனை கூட்டம்

குளித்தலை:வணிக நிறுவனங்களில், பெயர் பலகையை தமிழில் வைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், குளித்தலை நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக அரசு வழிகாட்டுதல்படி, நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகளின் பெயர் பலகைகளும், வணிக நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் வைக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இதை அனைத்து வணிகர்களும் ஏற்றுக் கொண்டு, தமிழில் பெயர் பலகை வைக்க முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !