உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமான கழிப்பறை: சொல்ல முடியாத துயரம்

சேதமான கழிப்பறை: சொல்ல முடியாத துயரம்

கரூர்:கரூர் அருகே, அரசு காலனியில், 300க்கும் மேற்-பட்ட வீடுகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், கழிப்பிட கட்டடம் சேதமடைந்துவிட்டதால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகாலை நேரத்தில், திறந்த வெளியிடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.மேலும், இப்பகு-தியில் சுகாதார கேடும், தொற்று நோய் பரவு-வதை தடுக்கவும், இந்த கழிப்பிடத்தை சீரமைத்து உடனடியாக திறக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை