உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த மேலமைலாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 45. இவரது மகள் அட்சயா, 19, குளித்தலையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 21ம் தேதி காலை 8:00 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, சங்கர் கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி