உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை:திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அணியாப்பூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சுகன்யா, 20, தரகம்பட்டியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்கிறார். கடந்த 6ம் தேதி மாலை 5:30 மணிக்கு கடையை பூட்டி விட்டு, சுகன்யா வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என, ஏழுமலை கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து சுகன்யாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ