மகள் மாயம் : தாய் புகார்
குளித்தலை:குளித்தலை அடுத்த சேங்கல் பஞ்., சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவரது தாய் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த, 31- மதியம், 1:30 மணி முதல் காணவில்லை. தோழிகள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.