மேலும் செய்திகள்
விவசாய கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
05-Oct-2024
கட்டளை மேட்டு வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம்கிருஷ்ணராயபுரம், நவ. 1-மேட்டுத்திருக்காம்புலியூர், கட்டளை மேட்டு வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, மேட்டுத்திருக்காம்புலியூர் வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் நேற்று, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் இறந்த நிலையில் மிதந்து வந்தது. இதை பார்த்த மக்கள் மாயனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, அடையாளம் தெரியாத இறந்த ஆண் நபரின் சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
05-Oct-2024