பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்ட, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கி-ணைப்பு குழு சார்பில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்-பாட்டம் நடந்தது.அதில், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, 13 ஆண்டுக-ளாக பணியாற்றி வரும், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்-வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ரூசோ, பொருளாளர் மாரியம்மாள் உள்பட, 50க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றனர்.