உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மகளிர் சுய உதவிக்குழுவுடன் துணை முதல்வர் கலந்துரையாடல்

கரூரில் மகளிர் சுய உதவிக்குழுவுடன் துணை முதல்வர் கலந்துரையாடல்

கரூர், கரூர், திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவின், பேப்பர் பை தயாரிக்கும் கூடத்தை, துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டு குழு செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.கரூர் மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில், 32,941 குழுக்களை சேர்ந்த, 3,95,292 உறுப்பினர்களுக்கு, 1,777.34 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் திருநகரில் செயல்படும் குழுவின் உறுப்பினர்கள் பேப்பர் பை தயாரித்தல் மட்டுமின்றி, குழுவிற்குள் வழங்கப்படும் உள்கடன் தொகையைக் கொண்டு உணவகம் நடத்துதல், டெக்ஸ்டைல் வணிகம், மருந்தகம், தையல் பணி ஆகிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பேப்பர் பை தயாரிக்கும் கூடத்தில் இயந்திர செயல்பாடு, தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பேப்பர் பைகளை பார்வையிட்டு, தயாரிக்கும் நடைமுறைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி கேட்டறிந்தார். மகளிர் சுய உதவிக் குழுவின் வங்கி வரவு, செலவு, கடன் பெறுதல், திரும்ப செலுத்துதல், உறுப்பினர்களுக்கு உள்கடன் அளித்தல் உள்ளிட்ட குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலாளர் உமா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !