உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாடக நடிகர் சங்க பொதுகுழு கூட்டÝத்தில் தகராறு

நாடக நடிகர் சங்க பொதுகுழு கூட்டÝத்தில் தகராறு

கரூர்: கரூர் அருகே நடந்த நாடக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கரூர் மாவட்ட நாடக நடிகர் சங்கம், வெள்ளியணை சாலையில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளது. அதில், நேற்று தற்போ-தைய தலைவர் பழனிசாமி தலைமையில், பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, முன்னாள் தலைவர் அண்ணாதுரை தலை-மையில் சிலர், பொதுக்குழு கூட்டம் நடந்த இடத்துக்கு சென்-றனர். இதனால், பழனிசாமி தரப்பினர், கேட்டை மூடினர். இதை-யடுத்து, அண்ணாதுரை தரப்பினருக்கும், பழனிசாமி தரப்பின-ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தகவலறிந்த, தான்தோன்றிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தி விலக்கி விட்டனர். பின், பழனிசாமி தரப்பும், அண்ணாதுரை தரப்பும், தனித்தனியாக போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை