மேலும் செய்திகள்
மூத்தோர் தடகள போட்டி; வலிமை காட்டிய வீரர்கள்
09-Oct-2025
கரூர், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில் கரூர் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டி நடந்தது. கலெக்டர் தங்கவேல் போட்டியை தொடங்கி வைத்தார். கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தான்தோன்றிமலை ஆகிய, 5 குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற, 850 மாணவ,- மாணவியர் கலந்து கொண்டனர். 100 மீட்டர், 200, 400, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தட்டி தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடந்தன.
09-Oct-2025