உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  கோவில் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க., வேட்பாளர்

 கோவில் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க., வேட்பாளர்

கரூர்: கரூர், தான்தோன்றிமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை, தி.மு.க., வேட்பாளர் ராஜினாமா செய்துள்ளார். கரூர், தி.மு.க., வேட்பாளராக ஆசி. தியாகராஜன் போட்டியிடுகிறார். இவர், கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். 'அறங்காவலர் குழுவில் இருந்து, அரசியல் சார்பு கொண்ட நபராக இருக்கும் தியாகராஜனை நீக்க வேண்டும்' என, அக்கோவில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விபரங்களை மேற்கோள் காட்டி, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் மனு அனுப்பினார். இதையடுத்து, 'தற்போது தியாகராஜன், அறங்காவலர் உறுப்பினர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்' என, ராம ரவிகுமாருக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், கோவில் உதவி கமிஷனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை