உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா மழையிலும் தொண்டர்கள் உற்சாகம்

கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா மழையிலும் தொண்டர்கள் உற்சாகம்

கரூர், * கரூரில் நேற்று நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில், பொதுச்செயலர் துரைமுருகன் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, உடல்நிலை காரணமாக பொதுச்செயலர் துரைமுருகன் பங்கேற்க முடியவில்லை என்று கூறினார்.* விழா தொடங்கியவுடன் மழை பெய்ய தொடங்கி விட்டது. இருந்தபோதும் தொண்டர்கள், பொதுமக்கள் கலைந்து செல்லாமல், தலையில் சேர்களை கவிழ்த்து கொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேச்சை கவனித்தனர்.* இளைஞர்கள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையிலும், இளம் பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையும் அணிந்து அமர்ந்திருந்தனர்.* கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி பிரிவு அருகில் விழா நுழைவாயில் முதல், மேடை வரை, 800 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சாலை வழியாக திறந்தவெளி ஜீப்பில், முதல்வர் ஸ்டாலின் நின்று கொண்டு வந்தார். அப்போது, தொண்டர்கள், பொதுமக்கள் கையசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை