போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம்
கரூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், திருமாநிலையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன், தலைவர் பழனிசாமி தலைமையில் வாயிற்கூட்டம் நடந்தது.அதில் மின்சார பஸ், மினி பஸ் மற்றும் பணிமனைகளை தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும். காலியாக உள்ள, 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டி.ஏ., உயர்வை வழங்க வேண்டும், மேல் முறையீட்டு மனுக்கள் மீது, நடவடிக்கை எடுத்து தண்டனைகளை குறைக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை போக்குவரத்து கழகங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மண்டல பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல், துணை செயலாளர் அன்புராஜ், நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.