உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி

இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம், சேங்கல் கடைவீதியில், சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமை வகித்தார். சேங்கல் கடைவீதியில், நேற்று இரட்டைமலை சீனிவாசன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பழையஜெயங்கொண்டம் நகர செயலாளர் முருகேசன், பூவாம்பாடி பிரசாந்த், சேங்கல் சுபாஷ், பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி