உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடிகால் துார்வார நடவடிக்கை தேவை

வடிகால் துார்வார நடவடிக்கை தேவை

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிம-லையில், பல்வேறு தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்-கடை வடிகால்கள், பெரும்பாலும் தரையோடு தரையாக தாழ்வாக உள்ளன. இதனால், கழிவுநீர் அனைத்தும் முறையாக செல்லாமல், ஆங்-காங்கே தேங்கி நிற்கிறது.மழை பெய்யும்போது, சாக்கடை நீர் சாலையில் ஓடி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. துர்நாற்றத்தால், மக்கள் அவதிப்பட்டு வருகின்-றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை வடிகால்-களை தரம் உயர்த்தி கட்ட வேண்டும். மேலும், துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை