உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே நிழற்கூடம் முன் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பு

கரூர் அருகே நிழற்கூடம் முன் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பு

கரூர்,கரூர் அருகே பயணிகள் நிழற்கூடம் முன், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது.கரூர் - வெள்ளியணை சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, நிழற்கூடம் உள்ள சாலையில், புதிதாக கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நிழற்கூடம் முன் கழிவு நீர் வாய்க்கால் கட்ட தோண்டப்பட்ட குழி, பணிகள் நிறைவு பெற்றும், திறந்த நிலையில் இருந்தது. இதனால், நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கரூர் கலெக்டர் அலுவலக எதிரே உள்ள, பயணிகள் நிழற்கூடம் முன், கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக முடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்