உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் வாய்க்கால் படித்துறை

மோசமான நிலையில் வாய்க்கால் படித்துறை

கிருஷ்ணராயபுரம், டிச. 24-சிந்தலவாடி, வாய்க்கால் படித்துறை மோசமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து கட்டளை தென்கரை வாய்க்காலில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது சிந்தலவாடி, விட்டுக்கட்டி, ஆண்டியப்ப நகர் பகுதி மக்கள் வாய்க்காலில் குளித்து வந்தனர். தற்போது வாய்க்காலில் உள்ள படித்துறை சிதலமடைந்து மிகவும் மோசமாக இருக்கிறது. தண்ணீர் சென்றபோதும், படித்துறையில் நின்று குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, படித்துறையை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை