உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதை மாத்திரை, ஊசி பறிமுதல்; 4 பேர் கைது

போதை மாத்திரை, ஊசி பறிமுதல்; 4 பேர் கைது

குளித்தலை, கிருஷ்ணராயபுரத்தில், போதை மாத்திரை, ஊசி வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாளீஸ்வரர் கோவில் அருகே, வாலிபர்கள் மது போதையில் தகாத வார்த்தையில் பேசிக்கொண்டு இருப்பதாக, மாயனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 3ம் தேதி மாலை 6:00 மணியளவில் சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.அப்போது, தீங்கு விளைவிக்கும் வகையில் போதையை ஏற்படுத்தும் மாத்திரைகளை அவர்கள் வைத்திருந்தனர். இதில், கிருஷ்ணராயபுரம் மேளக்கார தெருவை சேர்ந்த மணிகண்டன், 22, திருமாநிலையூர் காமராஜர் தெரு நித்திஷ், 22, கல்லுமடை பெயின்டர் சித்திகுமரன், 19, கரூர் தாந்தோன்றிமலை ராயனுார் ஹரிராம், 22, ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து, 30 போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மாயனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை