மேலும் செய்திகள்
தர்மபுரியில் சாரல் மழை
03-Nov-2024
அடிக்கடி மாறும் வானிலையால்கரூரில் விட்டு விட்டு சாரல் மழைகரூர், நவ. 5-கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அடிக்கடி வானிலை நிலவரம் மாறுகிறது. இதனால், குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இருப்பினும், கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியம், 3:00 மணி முதல் கரூர் டவுன் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இடையில் அடிக்கடி, வெயிலும் அடித்ததால், பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
03-Nov-2024