உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாழ்வான சுவராக உள்ளதால் பறக்கும் குப்பையால் தவிப்பு

தாழ்வான சுவராக உள்ளதால் பறக்கும் குப்பையால் தவிப்பு

கரூர், கரூர் வாங்கல் பகுதியில், மாநகராட்சி குப்பை கிடங்கின் சுற்றுச்சுவர் தாழ்வாக உள்ளதால், சாலையில் குப்பை பறப்பதால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.கரூர், வாங்கல் சாலையில் அரசு காலனி அருகில் குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, இங்கு கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கின் சுற்றுச்சுவர் தாழ்வாக உள்ளதால், குப்பை காற்றில் பறந்து சாலையின் பல்வேறு இடங்களில் பரவி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், துர்நாற்றம் காரணமாக அவ்வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். குப்பை கிடங்கின் சுற்றுச்சுவரை உயரமாக கட்ட வேண்டும் என, அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த பகுதியை பார்வையிட்டு சுற்றுச்சுவற்றின் உயரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை