உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.21.11 கோடி கல்வி கடன்: கரூர் கலெக்டர் தகவல்

ரூ.21.11 கோடி கல்வி கடன்: கரூர் கலெக்டர் தகவல்

கரூர்: ''மாவட்டத்தில்,1,047 மாணவர்களுக்கு, 21.11 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். பின்னர் அவர் கூறியதாவது:'வித்யாலட்சுமி போர்டல்' என்ற இணையதளம் மூலம், கல்லூரி விபரம், ஆதார் எண் உள்ளிட்ட அத்தியாவசிய விபரங்களை பதிவேற்றம் செய்து, வங்கியாளர்களின் பரிசீலனைக்கு பின் ஆன்லைன் மூலமாகவே வங்கி கடன்பெறக்கூடிய ஒரு சிறப்பு திட்டம். மாவட்டத்தில் இதுவரை, 1,047 மாணவர்களுக்கு, 21.11 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 21 மாணவர்களுக்கு, 1.13 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட உள்ளது. அனைத்து வங்கிகளும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று கல்வி கடன் வழங்கி வருகிறது.புதுமைப்பெண் திட்டத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு கல்லூரியில் சேர்ந்தவுடன் மாதம்,1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர், கூறினார்.டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ