உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் வைத்து சூதாட்டம் எட்டு பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் எட்டு பேர் கைது

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் புன்னம் சத்திரம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக தர்மராஜ், 42; ஈஸ்வரன், 27; சுதாகர், 28; அன்பழகன், 25; அரவிந்த், 26; மற்றொரு சுதாகர், 24; கார்த்தி, 29; பூபதி, 41; ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 7,790 ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ