உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்

கரூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்

கரூர், கரூரில் மின் குறைதீர் கூட்டம், இன்று (8 ல்) நடக்கிறது.இதுகுறித்து, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கரூர் மின் பகிர்மான வட்டத்தை சார்ந்த பகுதியில், மாதாந்திர மின் குறைதீர் கூட்டம், மூன்று இடங்களில் நடக்கிறது. அதன்படி இன்று காலை, 11:00 மணிக்கு கரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.வரும், 15ல் காலை, 11:00 மணிக்கு குளித்தலை செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22 காலை, 11:00 மணிக்கு கரூர் கிராமியம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அதில், பொது மக்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ