உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிலப்பிரச்னையில் முன்பகை: 12 பேர் மீது வழக்கு பதிவு

நிலப்பிரச்னையில் முன்பகை: 12 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை : குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரம் கம்மாளர் தெருவை சேர்ந்தவர் மாங்கனி, 49. மகளிர் திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இதே ஊரை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் இடையே, நில பிரச்னையில் முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த, 6 மாலை 4:30 மணியளவில் வீட்டில் இருந்த மாங்கனியை, விஜயராகவன், கதிரவன், கலையரசி, இளஞ்செழியன், கந்தன், அம்சா ஆகியோர் சேர்ந்து கையால் தாக்கினர். தடுக்க வந்த உறவினர் ரத்தினம்மாள் என்பவரையும் தாக்கினர். பலத்த காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து மாங்கனி கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து, இளஞ்செழியன், கந்தன் ஆகியோரை கைது செய்தனர். இதே வழக்கில், இளஞ்செழியன் கொடுத்த புகார்படி, சசிகுமார், மோகன், மாங்கனி, ரத்தினம்மாள், காயத்ரி, காவியா ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து, சசிகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ