அரசு கல்லுாரியில் கட்டுரை, பேச்சு போட்டி
கரூர், கரூர் அரசு கலைக்கல்லுாரி யில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தன.கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ்நாடு விழாவையொட்டி, மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, மற்றும் பேச்சு போட்டிகள், கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது. 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை, தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.