உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை பெற அங்கபிரதட்சணம்

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை பெற அங்கபிரதட்சணம்

கரூர்: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை பெறக்கோரி, கரூர் மாரியம்மன் கோவிலில், அறம் மக்கள் கட்சியினர் அங்கபிரதட்சணம் செய்தனர்.தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன், 14ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மீதான மனு வரும் ஜூலை, 10ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.இந்நிலையில், அறம் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் காமராஜ் தலைமையில், அக்கட்சியினர் நேற்று கரூர் மாரியம்மன் கோவிலில், செந்தில் பாலாஜி விடுதலை பெறக்கோரி அங்கபிரதட்சணம் செய்தனர். பிறகு, மாதர்ஷா தர்க்கா, சி.எஸ்.ஐ., சர்ச் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ