உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர் ;கரூர் மாவட்ட, முன்னாள் முப்படை படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், இந்திய ராணுவ வீரர்களை தரக்குறைவாக பேசிய, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜூவை கண்டித்தும், அவர் மீது தமிழக அரசு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கோபால், பொருளாளர் நம்பெருமாள், நிர்வாகிகள் செந்தில் நாதன், சவுந்திரம், வெங்கடாச்சலம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை